டாக்டர் ஹரிஷ் நாயகனாகவும் தனலட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஹரிஷ் சினிமாஸ் சார்பில் அழகு பாண்டியன் தயாரித்துள்ளார்.
மதுவிலக்குக்குப் பிறகு மாறும் வாழ்க்கை
படத்தின் கதை குறித்து இயக்குநர் பிரபு ராம் கூறுகையில், அரசு நினைத்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கைக் கொண்டு வர முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசு மதுவை வழங்கிவிட்டு, குடிக்கக் கூடாது என்று கூறுவதில் உள்ள முரண்பாடும் படத்தில் பேசப்படுகிறது.
மது பழக்கம் கொண்ட கதாநாயகன், தனது நண்பர்களுடன் இணைந்து அதற்கான சங்கத்தைத் தொடங்கி ரகளையில் ஈடுபடுகிறார். பின்னர் மதுவிலக்கு அமலுக்கு வந்ததும், அவரது வாழ்க்கையிலும் நாட்டில் உள்ள குடும்பங்களிலும் ஏற்படும் மாற்றங்கள் கதையாகச் சொல்லப்படுகின்றன.
Nallapadam Tamil film நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் சமூகக் கருத்துகளை இணைத்துப் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சசிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.






























