கவுகாத்தியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி, தனது மனைவி ரியாவைக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். உடலையும் தலையையும் பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் மறைத்திருந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் வீட்டைச் சோதனையிட்ட போலீஸார், ரியாவின் உடல் மற்றும் தலையை மீட்டனர்.
போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
விசாரணையின்போது, மனைவி தன்னை ஏமாற்றியதாகவும், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் ராமானுஜ் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். கொலை நடந்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், வீட்டில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 8ஆம் தேதி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கொலை குறித்து வருத்தமில்லை என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறையிலிருந்து வெளியே வந்தால் தனது மனைவியின் ‘சுகர் டாடி’ எனக் குறிப்பிடப்பட்ட நபரையும் கொலை செய்வேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை ஹதிகான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நரகசுர் பஹார் அருகே போலீஸாரைத் தாக்கிவிட்டு ஓடும் வாகனத்தில் இருந்து அவர் குதித்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தில் விழுந்து காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். Guwahati wife murder case விசாரணை இதனால் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.































