இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தாயின் போராட்டத்தைச் சொல்லும் செஸ் கதை
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் ஒரு தாய், வறுமை மற்றும் சமூகச் சவால்களை கடந்து தனது மகனை செஸ் விளையாட்டில் சாதிக்க வைக்கப் போராடுகிறார். அந்த மகனை ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக்கும் தாயின் முயற்சியே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களமாக அமைந்துள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செஸ் விளையாட்டின் பின்னணியில் தாயும் மகனும் இடம்பெற்றுள்ளனர். The Grand Master Tamil film படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






























