புதிய சிவில் வழக்கைத் தொடர்ந்து விசாரணை
முதலில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டபோதும், 2024ஆம் ஆண்டு எந்த வழக்கும் தொடரப்படவில்லை. இதையடுத்து எழுந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நியூயோர்க் மாநிலத்தின் டாம்ப்கின்ஸ் மாவட்ட வழக்கறிஞர் மேத்யூ வான் ஹவுடன் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளார்.
செப்டம்பர் 16ஆம் தேதி நியூயோர்க் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையின்போது, சம்மதம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு மாணவியின் சாட்சியம் இல்லை என வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். அதேவேளை, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர்மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் சி ஃபி (Chi Phi) என்ற ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள மாணவர் சகோதர அமைப்பைச் சேர்ந்தவர்களை குறிக்கின்றன. அந்த அமைப்பு மூடப்பட்டுள்ளதாகவும், ஏழு மாணவர்களுக்கும் இடைநீக்கம் மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கார்னெல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Cornell University rape investigation தொடர்பாக ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸும் கருத்து தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாலியல் வன்முறை கலாச்சாரத்தை அவர் விமர்சித்ததுடன், பல்கலைக்கழகம் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டினார்.



























