பேரணிக்கு அனுமதி இல்லை என போலீஸ் எச்சரிக்கை
டெல்லி சென்ட்ரல் பார்க்கில் பொதுமக்களும் ஆதரவாளர்களும் தேசியக் கொடியை அசைக்க வேண்டும் என அபிஜித் திப்கே அழைப்பு விடுத்திருந்தார். இன்று மாலை நடைபெறவுள்ள பேரணியில் அவரும் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்ட்ரல் பார்க் பொதுமக்களுக்கு மூடப்படும் என புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
டெல்லி போலீஸார் அபிஜித் திப்கேவை நேரில் சந்தித்து, பேரணியை நடத்த வேண்டாம் எனக் கூறி நோட்டீஸ் வழங்கினர். சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களைத் தூண்டுவது சட்டவிரோதமானது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபிஜித், பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தன்னை வேண்டுமானால் தூக்கிலிடலாம் என்றும் கூறினார்.
தேசியக் கொடியை அசைப்பது சட்டவிரோதமல்ல என்றும், ஆனால் அனுமதியின்றி பேரணி நடத்துவதும் கூட்டம் சேர்ப்பதும் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என்றும் போலீஸார் விளக்கினர். தேசியக் கொடி விதிமுறைகளின்படி கொடியை உரிய மரியாதையுடன் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஜந்தர் மந்தர் செல்லும் வழி, கன்னாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் BNSS பிரிவு 163-ன் கீழ் ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில், Delhi National Flag Rally தொடர்பாக போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தேசியக் கொடியை அசைத்து, தேசிய கீதம் பாடுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.






























