முரளி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘தர்மன்’ படத்தின் பெயரைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வருவதாகக் கூறியுள்ளார். தாய்லாந்தில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க, ‘நடிகர் அட்டை’ பெற வேண்டும் எனக் கூறி ரூ.12,500 முன்பணமாகக் கேட்டு பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலி விளம்பரங்கள் குறித்து போலீஸார் விசாரணை
இந்த வாய்ப்பைப் பெறுபவர்களுக்கு ரூ.18.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனப் பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடி நடைபெற்றதாக முரளி தெரிவித்துள்ளார்.
Dharaman movie casting scam குறித்து சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இணையத்தில் போலி விளம்பரங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


































