தற்போதைய விதிமுறைகளின் கீழ் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் குறிப்பிட்ட எடையை விட அதிகமான ட்ரோன்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்சார் மற்றும் வணிகத் தேவைகளுக்காக ட்ரோன்களை இயக்குபவர்களுக்கான உத்தியோகபூர்வ உரிம முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் அந்த உரிமத்தைப் பெற தத்துவார்த்தத் தேர்வுகள் மருத்துவ மதிப்பீடுகள் பாதுகாப்பு அனுமதி மற்றும் செயற்பாட்டு திறன் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வணிக நிறுவனங்களை சட்ட அமலாக்க அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் இந்த புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
































