விமான அறைக்குள் நடந்த போராட்டம்
காயமடைந்த விமானி இந்தியாவைச் சேர்ந்த Smit Machchhar என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான அறையின் கதவைத் திறந்தபின், பயணிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய விமானியை கட்டுப்படுத்தினர். அவர்களில் Yaniv Hayoun, Tzvika Manes, Shota Musayev, Asaf Rajuan உள்ளிட்டோர் இருந்தனர். சில பயணிகள் விமானக் கட்டுப்பாடுகளைப் பிடித்து விமானத்தை நிலைப்படுத்த உதவினர்.
பணியில் இல்லாத இரு flydubai விமானிகள் பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்று, சவுதி அரேபியாவின் Tabuk நகரில் பாதுகாப்பாக தரையிறக்கினர். தரையிறங்கியபோது மருத்துவப் பணியாளர்கள், உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக பயணிகள் கூறினர்.
விமானத்தில் குறைந்தது இரண்டு ஆஸ்திரேலியர்கள் இருந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Penny Wong உறுதிப்படுத்தினார். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, பயணி Yaniv Hayoun-ஐ சந்தித்து பாராட்டு தெரிவித்தார். விமானம் பின்னர் டெல் அவிவ் நோக்கி சென்றது.






























