செப்டம்பர் 30 அன்று துபாயிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 174 பேர் பயணித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, விமானத்திலிருந்து முதலில் பொது அவசரநிலை 7700 சிக்னலும், சில நிமிடங்களில் விமானக் கடத்தல் அல்லது ஆக்கிரமிப்பைக் குறிக்கும் 7500 சிக்னலும் அனுப்பப்பட்டன.
காக்பிட்டில் ஏற்பட்ட மோதல்
விமானத்தின் மற்றொரு விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அவர் விமானத்தைத் தகர்க்க முயன்றதாகவும், அதைத் தடுக்க முயன்ற ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த நிலையிலும் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாமல், காக்பிட் கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்றவர்கள், குற்றம்சாட்டப்படும் விமானி கட்டுப்பாட்டு கருவிகளைச் சேதப்படுத்த முயன்றதாகவும், அவரை வெளியே இழுத்ததாகவும் கூறியுள்ளனர். இதன் பின்னர் விமானம் சவூதியில் தரையிறக்கப்பட்டது.
Flydubai pilot stabbing தொடர்பான சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் விமானி குறித்து இதுவரை மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இந்தச் சம்பவத்துக்கு ஹமாஸ் அல்லது ஈரான் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தத் தொடர்பும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.






























