பிரான்சில் வெப்ப அலை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் Météo-France புதன்கிழமை 8 ஜூலை 2026 அன்று 67 மாவட்டங்களுக்கு canicule காரணமாக Orange vigilance எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை 61 மாவட்டங்கள் Orange எச்சரிக்கையில் இருந்த நிலையில் வெப்பம் மேலும் பல பகுதிகளுக்கு பரவியதால் புதன்கிழமை இந்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
Météo-France தகவலின்படி Orange எச்சரிக்கை என்பது ஆபத்தான வானிலை நிலை ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது. மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் தனியாக வாழ்பவர்கள் வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக உடல் நீர்ச்சத்து குறைவு, சோர்வு, மயக்கம், heat stroke போன்ற அபாயங்கள் அதிகரிக்கலாம். தேவையற்ற வெளிச்செல்லலை தவிர்க்கவும் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், குளிர்ந்த இடங்களில் இருக்கவும் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களுக்குள் தனியாக விடக்கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
































