நேரப் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட திரைப்படத் திட்டம்
அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஜார்ஜ் லூகஸ், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதும், லூகஸ்ஃபில்மை டிஸ்னிக்கு விற்பதும் எளிதான முடிவாக இருக்கவில்லை என்றார். 2012ஆம் ஆண்டு லூகஸ்ஃபில்ம் நிறுவனம் 4 பில்லியன் டாலருக்கு டிஸ்னிக்கு விற்கப்பட்டது.
தனக்கு 82 வயதாகிவிட்டதால், முன்னால் உள்ள காலத்திற்கு ஒரு வரம்பு இருப்பதை உணர்ந்ததாக லூகஸ் தெரிவித்தார். அப்போது மேலும் மூன்று ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களை உருவாக்க வேண்டியிருந்ததாகவும், நேரம் போதாது எனக் கருதியதால் George Lucas Star Wars trilogy திட்டத்தைத் தொடரவில்லை என்றும் அவர் விளக்கினார்.
திரைப்படத் துறைக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கனவே அதிக நேரம் செலவிட்டிருந்த லூகஸ், பின்னர் அருங்காட்சியகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். இந்தப் பணியில் அவரது மனைவி மெலடி ஹாப்சனும் உதவினார்.
அருங்காட்சியகத்தின் கட்டிடக்கலை மற்றும் கலை வடிவமைப்பில் ஒவ்வொரு சிறு விபரத்திலும் லூகஸ் நேரடியாக ஈடுபட்டதாக ஹாப்சன் கூறினார். தொடர்ந்து அந்த அளவிலான பணியில் ஈடுபட்டது அவரது உடல்நலத்தையே பாதிக்கும் நிலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.


































