குருகிராமில் வசித்து வந்த சாம்பவ் ஜெயின் (28), நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த ஹோட்டலின் 43வது மாடியில் இருந்து குதித்து அவர் உயிரிழந்தார். அதற்கு முன்பு பால்கனிக்கு வெளியே இருந்த கம்பியில் அவர் தொங்கியபடி காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடன் மற்றும் குடும்பச் சூழ்நிலை குறித்து விசாரணை
தற்கொலைக்கு முன்பு ஜெயின் பதிவு செய்த வீடியோவில், மன அழுத்தம் மற்றும் கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியிருந்தார். தன் முடிவுக்கு தானே காரணம் என்றும், வேறு யாரும் காரணமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனைவி விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், முதலில் ஒரு கோடி ரூபாய் நிவாரணமாகக் கேட்கப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொகை ரூ.15 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினர். இதில் ரூ.7.5 லட்சத்தை ஜெயின் ஏற்கனவே செலுத்தியிருந்தார்.
குறைப்பிரசவத்தில் பிறந்த மகனின் மருத்துவச் செலவுக்காக இதுவரை ரூ.40 லட்சம் வரை செலவிட்டிருந்தார். தொடர்ந்து ஏற்பட்ட செலவுகளால் அவர் அதிகளவில் கடன் பெற்றிருந்ததாகவும், உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததாகவும் போலீஸ் அதிகாரி சும்னேஷ் குமார் தெரிவித்தார். Gurugram software engineer suicide தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






























