இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரான்ஸிலிருந்து சில புகலிடக் கோரிக்கையாளர்களை பிரிட்டனில் பரிசீலிப்பதற்காக அழைத்து வருவதும், சிறிய படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் வந்தவர்களை பிரான்ஸுக்கு அனுப்புவதும் திட்டமிடப்பட்டிருந்தது. புதிய விண்ணப்பங்கள் மூடப்பட்டாலும், பிரான்ஸுக்கான அகற்றல் விமானங்கள் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும்.
குடியேற்றத் திட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள்
திட்டத்தை விரிவுபடுத்துவதில் தளவாடச் சிக்கல்கள் இருந்ததாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, அதிகமான நபர்களைத் தடுத்து வைப்பதற்கான இடவசதி குறைவாக இருந்ததால், அகற்றல் நடவடிக்கைகளை அதிகரிப்பது கடினமாக இருந்ததாக அவர் முன்பு கூறியிருந்தார்.
அதேவேளை, பிரிட்டன் மீள்குடியேற்றத் திட்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உள்ளூர் குழுக்கள் அகதி குடும்பங்களுக்கு வீடு, சமூக இணைப்பு மற்றும் பிற ஆதரவுகளை வழங்கும் சமூக அனுசரணைத் திட்டம் இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் குடும்பங்கள் 2027 இலையுதிர் காலத்தில் வரலாம்.
இந்த வழித்தடங்களுக்கு ஆண்டுதோறும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். சட்டவிரோத குடியேற்றம் குறைந்தால், வருகையாளர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்து சில ஆயிரங்களாக அதிகரிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. UK France one in one out deal முடிவடைந்த நிலையில், அகதிகளுக்கான இடங்கள் நூற்றுக்கணக்காக அல்லாமல் ஆயிரக்கணக்கில் இருக்க வேண்டும் என அகதிகள் பேரவை எச்சரித்துள்ளது.































