இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட மொத்தமாகக் குறைந்திருந்தாலும், பாதுகாவலரற்ற குழந்தைகளின் விகிதம் 2024ஆம் ஆண்டின் 51 சதவீதத்திலிருந்து 2025ஆம் ஆண்டில் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பா சென்ற குழந்தைகளில் 78 சதவீதம் பேர் சிறுவர்கள்; 22 சதவீதம் பேர் சிறுமிகள்.
பாதுகாவலரற்ற குழந்தைகளுக்கு அதிகரிக்கும் அபாயங்கள்
பல்கேரியா, சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, மால்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கடல் மற்றும் தரைவழியாக வந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்தது. இத்தாலியை அடைந்த 14,000க்கும் மேற்பட்ட சிறார்களில் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். கிரீஸில் ஆப்கானியர் மற்றும் சிரியர் குழந்தைகள் அதிகமாக இருந்தனர். ஸ்பெயினில் அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.
மத்தியதரைக் கடல், அட்லாண்டிக் பாதை மற்றும் மேற்கு பால்கன் வழித்தடங்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 4,600க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உடல் வன்முறையை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். இவ்வாறான Unaccompanied migrant children in Europe மனிதக் கடத்தல், சுரண்டல் மற்றும் வன்முறைக்கு அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் லிபியாவில் அதிகமாக பதிவாகியுள்ளன.
பாதுகாப்பான பாதைகள் குறைந்தால், இளைஞர்கள் ஆபத்தான வழிகளைத் தேர்வு செய்து மனிதக் கடத்தல்காரர்களை மேலும் சார்ந்திருக்கும் நிலை உருவாகலாம். ஜூனில் நடைமுறைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றம் மற்றும் புகலிட ஒப்பந்தம் குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தைகளின் சிறந்த நலனே அனைத்து முடிவுகளிலும் முன்னுரிமை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.































