ஆண்டுதோறும் உச்சத்தை அடையும் உம்ரா பருவத்தை முன்னிட்டு மக்கா மற்றும் மதீனா இடையிலான பயண தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக SAR தெரிவித்துள்ளது. ஹரமைன் அதிவேக ரயில் திட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான போக்குவரத்து திட்டங்களில் ஒன்றாகும்.
இது மக்கா மற்றும் மதீனாவை ஜித்தா மற்றும் கிங் அப்துல்லா பொருளாதார நகரம் (King Abdullah Economic City) வழியாக இணைக்கிறது. இந்த ரயில்கள் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் மக்கா மற்றும் மதீனா இடையிலான பயண நேரம் சுமார் இரண்டு மணிநேரமாக குறைகிறது.
மேலும் இந்த கூடுதல் சேவைகள் காலநிலை மற்றும் பயணிகளின் தேவையை மதிப்பீடு செய்து திட்டமிடப்பட்டதாகவும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவை தரம் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக SAR தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ரமலான் காலத்தில் அதிகமான பயணிகளை சமாளிக்க இயக்க மற்றும் புலம் சார்ந்த பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.






























