இந்த மாற்றங்கள் அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் அனைத்து சர்வதேச தொடர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே நடைபெறும் தொடர்கள் முந்தைய விதிகளின்படியே தொடரும். ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களுக்குமான திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய விதிகளில் முக்கிய மாற்றங்கள்
பேட்டர் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாவிட்டால், முதல் முறை எச்சரிக்கை வழங்கப்படும். இரண்டாவது முறை இறுதி எச்சரிக்கையும், மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு முறையும் பந்துவீச்சு அணிக்கு 5 அபராத ஓட்டங்களும் வழங்கப்படும். தொடர்ந்து விதிமீறல் ஏற்பட்டால் நடத்தை விதிகளும் பயன்படுத்தப்படலாம்.
பெண்கள் மற்றும் இளையோர் கிரிக்கெட்டுக்கான பந்துகளுக்கு தனித்தனி அளவு மற்றும் எடை வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை இரு பிரிவுகளுக்கும் ஒரே பந்து பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.
தவறான களத்தடுப்பு, ஓவர்த்ரோ எனக் கருதப்படாது. ரன்-அவுட் அல்லது ஸ்டம்பிங் செல்லுபடியாக, களத்தடுப்பாளர் பந்தை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பந்து இறுதியாக நிலைபெற்றதா என்பதை தீர்மானிக்க நடுவருக்கும் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பகல் நேர டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளின் ஒப்புதலுடன் இளஞ்சிவப்பு பந்தைப் பயன்படுத்தும் சோதனை அறிமுகமாகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே முடிவு எடுக்க வேண்டும்; தொடங்கிய பிறகு சிவப்பு பந்திலிருந்து இளஞ்சிவப்பு பந்துக்கு மாற முடியாது.
நாளின் கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தாலும், ஓவர் முடிவடையாமல் இருந்தால் விளையாட ஏற்ற சூழலில் மீதிப் பந்துகள் வீசப்படும். மேலும், டி20 சர்வதேச போட்டிகளில் 15 நிமிட இடைவேளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர இழப்பு ஏற்பட்டால் அது குறைந்தது 10 நிமிடங்களாகக் குறைக்கலாம். ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் லெக்-சைட் வைட் தொடர்பான சோதனை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
ICC playing conditions changes குறித்து ஆடவர் கிரிக்கெட் குழுத் தலைவர் சவுரவ் கங்குலி, நவீன கிரிக்கெட்டின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில், விளையாட்டின் வேகம், தெளிவு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.






























