மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் முன்னெடுத்த மத்தியஸ்த கட்டமைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும் ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த புதிய சம்பவம் மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. குறிப்பாக வான்வழி கண்காணிப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் MQ-9 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல்,பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
































