படத்தில் இரட்டை பொறுப்பில் கலைராணி
இணை இயக்குநர் நவீன் கேட்டுக்கொண்டதன் பேரில், படத்தின் ஒரு கதாபாத்திரத்துக்காக நடிப்பு பயிற்சி பட்டறையை கலைராணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலீலா உள்ளிட்ட சிலருக்கு அவர் பயிற்சி அளித்தார்.
ஸ்ரீலீலாவின் துடிப்பான ஆற்றல் ஒவ்வொரு பயிற்சி அமர்வையும் உயிர்ப்புடன் வைத்ததாக கலைராணி கூறியுள்ளார். குறிப்பாக நீண்ட வசனங்களை அவர் வெளிப்படுத்திய விதம் அற்புதமான அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் எதிர்பாராத விதமாக, தனுஷ் மற்றும் ஸ்ரீலீலாவுடன் இணைந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கலைராணிக்கு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்தை தனது பாணியில் வெளிப்படுத்த விரும்பியதாகவும், அதற்கான சுதந்திரத்தை வழங்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிப்பு பயிற்சியாளர் மற்றும் நடிகை என இரண்டு பணிகளைச் செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக கலைராணி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய ராஜ்குமார் பெரியசாமி, தன்னை படத்தில் இணைத்த நவீன், ஒத்துழைத்த நிகில் நாயர் மற்றும் ஷிர்லி யுவராஜ் ஆகியோருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். Kalairaani acting training for Sreeleela அனுபவம், கேமராவின் இருபுறமும் பணியாற்றிய பயணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனுஷின் மனைவியான ரோஜா கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளார். படம் நவம்பர் 20 அன்று வெளியாகியுள்ளது.































