தப்பிச் சென்ற வாகனம் சிம்பாங் பூலாயில் மடக்கப்பட்டது
நவம்பர் 20ஆம் தேதி மாலை 4.20 மணியளவில், கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட டொயோட்டா செரி பல்நோக்கு வாகனம் குறித்து தாப்பா மாவட்ட காவல் தலைமையக கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் தாப்பா அருகேயுள்ள ஜாலான் பஹாங், பத்து 3 பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மாலை 5.30 மணியளவில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை நிறுத்தி சோதனை செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டபோதும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதுவது போல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தாப்பா சுங்கச்சாவடி நோக்கி காவல்துறை வாகனம் துரத்திச் சென்றபோது, சந்தேக வாகனம் காவல் வாகனத்தின் முன்பகுதியை மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஈப்போ மாவட்ட காவல்துறை வாகனமும் துரத்தலில் இணைந்தது. இறுதியில் சிம்பாங் பூலாய் பகுதியில் வாகனம் மடக்கப்பட்டு, அதிலிருந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Teenagers arrested in Malaysia police chase சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி, கெடா மாநிலம் ஜித்ராவில் நடைபெறும் மற்றொரு விசாரணையில் தொடர்புடையவர் என்பதால், காவல் பிணையில் விடுவிக்கப்பட்டார். நால்வரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டத்தின் 186, 279 மற்றும் 353ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.





























