இளைஞர் வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத் தளர்வுகள்
முதல் ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் 100,000 ஐரோப்பியர்களும் அதே எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் இளைஞர்களும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தங்குவதற்கான உரிமையைப் பெற முடியும். 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் வேலை, கல்வி, ‘ஆ ஜோடி’ தங்கல், தன்னார்வ சேவை அல்லது பயணம் ஆகியவற்றுக்காக இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். இது 2028ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2030 ஜனவரியில் இளைஞர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மாணவர்களுக்கான பிரிட்டன் பல்கலைக்கழகக் கட்டணம் குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தீர்க்க இரு தரப்பும் ஆறு மாத கால அவகாசம் எடுத்துள்ளன.
இரண்டாவது ஒப்பந்தம் உணவு மற்றும் வேளாண் பொருட்களின் வர்த்தகத்தைச் சார்ந்தது. விலங்குகள், விலங்கு சார்ந்த பொருட்கள், தாவரங்கள் மற்றும் தாவரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய சான்றிதழ்கள் மற்றும் சோதனைகளை நீக்கி, பொதுவான சுகாதாரத் தரநிலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2028 மார்ச் 1 முதல் அமல்படுத்தப்படலாம். இதனால் பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 5.1 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கலாம்.
மூன்றாவது UK EU agreements, கார்பன் உமிழ்வு ஒதுக்கீட்டு முறைகளை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பிரிட்டிஷ் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் கார்பன் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். இந்த ஏற்பாடு ஆண்டுக்கு 3.8 பில்லியன் பவுண்டுகள் வரை பொருளாதார நன்மை தரும் என லண்டன் எதிர்பார்க்கிறது.
நீண்டகால உறவு குறித்து 2027ஆம் ஆண்டு ஆய்வு நடத்தப்படும் என்று பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறியுள்ளார். எனினும், இந்த அணுகுமுறையை நைகல் ஃபராஜ் விமர்சித்துள்ளார்.






























