பேராசிரியையின் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்
ஃபேஸ்புக் மூலம் 2025ஆம் ஆண்டு அறிமுகமான ஆஷிக், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகப் பேராசிரியை புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நான்கு மாதங்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் தன்னைத் தவிர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 18.05.2026 அன்று கள்ளக்குறிச்சி கியா மோட்டார்ஸ் அருகே சந்தித்தபோது ஆஷிக் தன்னை அவமதித்து காலால் உதைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்யான திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகக் கூறி, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிக் தற்போது தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கிடையிலானதாகக் கூறப்படும் செல்போன் உரையாடல்கள் மற்றும் உரையாடல் ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், பேராசிரியை தன்னைத் திருமணம் செய்ய மிரட்டுவதாக ஆஷிக் 22.10.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படும் கடிதமும் வெளியாகியுள்ளது.
இந்த Kallakurichi sexual assault case குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆஷிக் கிடைத்த பின்னர் முழு விவரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
































