44 வயதான கேட் மிடில்டன், செப்டம்பர் 30ஆம் தேதி புதன்கிழமை, புல்பரோ பகுதியில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் West Sussex Minibus அமைப்பைச் சந்தித்தார். அங்கு முதியவர்களுடன் அவர்களின் வாராந்திர மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வில்லியமுடன் வீட்டு வேலைகளைப் பகிரும் கேட்
புல்பரோ சமூகக் கூடத்தில் நடந்த உரையாடலில், “எனக்கு பாத்திரம் கழுவுவது மிகவும் பிடிக்கும். உண்மையாகவே!” என்று கேட் மிடில்டன் கூறினார். அப்போது அங்கிருந்த ஒருவர், “சிறப்பு, இப்போது ஒரு தன்னார்வலர் கிடைத்துவிட்டார்!” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
வீட்டுப் பணிகளில் இளவரசர் வில்லியம் உதவுகிறாரா என்று கேட்கப்பட்டபோது, அவர் பாத்திரங்களைத் துடைப்பதாக கேட் தெரிவித்தார். இருவரும் நல்ல கூட்டணி என்றும், தங்களது குழந்தைகளான ஜார்ஜ், சார்லட், லூயிஸ் ஆகியோரையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துவதாகவும் கூறினார். இதனால் Kate Middleton dishwashing comments சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியும் உணவுக்குப் பிறகு பாத்திரம் கழுவுவதில் விருப்பம் கொண்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தது. அவர் தானே பாத்திரம் கழுவத் தொடங்கினால், உதவ முன்வருபவர்களைத் தடுக்குமாறு பணியாளர்களிடம் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






























