கடந்த வாரம் நியமனத்தை அறிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், சக்கரியாவை வழக்கறிஞர் எனக் குறிப்பிட்டார். ஆனால், அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான பார் தேர்வை எந்த மாநிலத்தில் எழுதி தேர்ச்சி பெற்றார் என்று கேட்கப்பட்டபோது, அவர் “சீனாவுக்குச் சென்றபோது” என்று பதிலளித்தார். பின்னர், மரைன் ஒன் ஹெலிகாப்டரின் சத்தத்தால் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டதாக தெரிவித்தார்.
கலிபோர்னியா பார் அமைப்பில் புகார்
சக்கரியா 2011ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். அவர் கலிபோர்னியா பார் தேர்வை எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பட்டம் பெற்றிருப்பது மட்டும் அமெரிக்காவில் சட்டப் பணி செய்வதற்கான உரிமம் அல்ல.
Campaign for Accountability அமைப்பு கலிபோர்னியா மாநில பார் அமைப்பில் புகார் அளித்து விசாரணை கோரியுள்ளது. உரிமம் இல்லாமல் சட்டப் பயிற்சி செய்யத் தகுதியுடையவர் எனத் தன்னைப் பொதுமக்களிடம் தொடர்ந்து அறிமுகப்படுத்தியாரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது. Katie Zacharia legal credentials தொடர்பாக வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியூங், அவர் தனித்துவமான தகுதியும் திறமையும் கொண்டவர் எனக் கூறினார்.
சீனாவில் இருந்தபோது சர்வதேச பரிவர்த்தனைச் சட்டத்தில் பணியாற்றியதாக சக்கரியா கூறியுள்ளார். அவரது தொழில்முறைப் பதிவின்படி, 2011 முதல் 2013 வரை பெய்ஜிங்கில் உள்ள சோங் லுன் சட்ட நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

































