சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிலர் குறைந்த அளவு பட்டாசுகளை வாங்கி, பெரிய நிறுவனங்களைப் போல இணையதளங்களை உருவாக்கி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்படுவதால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஏமாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு சட்டத் தடை
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை இருப்பதாகவும், இருப்பினும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விற்பனையைத் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.45 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கிறது. பில் இல்லாத விற்பனை மற்றும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு குறித்தும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
கடந்த ஆண்டு சிவகாசி அனுமந்தம்பட்டியில், கோவையைச் சேர்ந்த ஒருவர் யூடியூபர் மூலம் விளம்பரம் செய்து, ஆர்டர் செய்தவர்களுக்கு பட்டாசுகளை வழங்காமல் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. Sivakasi online firecracker scam தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தெரிவித்துள்ளார்.
































