குவைத் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பல நாடுகளுக்கு முன்கூட்டியே பாரம்பரிய விசா பெறாமல் பயணம் செய்ய முடியும். இதில் விசா இல்லா நுழைவு, வருகையின்போது வழங்கப்படும் விசா மற்றும் மின்னணு பயண அனுமதி ஆகிய வாய்ப்புகள் அடங்கும்.
வளைகுடா நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை
Kuwait passport ranking 2026 பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. கத்தார் 85வது இடத்திலும், குவைத் 86வது இடத்திலும், சவுதி அரேபியா 88வது இடத்திலும் உள்ளன. பஹ்ரைன் 93வது இடத்தையும், ஓமன் 96வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் 182 என்ற Mobility Score உடன் உலகின் வலுவான பாஸ்போர்ட்டாக உள்ளது. கத்தார் 118, சவுதி அரேபியா 102, பஹ்ரைன் 99, ஓமன் 95 என்ற மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.




























