ஐரோப்பாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நடைமுறைக்கு வந்தால், விமானப் பயணத்திற்கு மாற்றாக வேகமான மற்றும் வசதியான ரயில் இணைப்பு கிடைக்கும். UK Tamil News
யூரோஸ்டார் சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) மற்றும் பிரான்சின் SNCF Voyageurs நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திட்டத்தின் கீழ் எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆரம்ப கணக்கீடுகளின்படி லண்டன் முதல் ஜெனீவா வரை சுமார் 5 மணி நேரமும், சூரிச் வரை சுமார் 6 மணி நேரமும் பயண நேரமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை 2030களின் தொடக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




























