பயணிகள் பாதுகாப்பை வலியுறுத்திய போலீஸ்
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் எந்த விளக்கமும் அளிக்காததால் பயணிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதிக கட்டணம் வசூலித்த புகாரின் காரணமாக பேருந்தை இயக்க வேண்டாம் என்று அமைச்சர் உத்தரவிட்டதாகவும், பேருந்தை இயக்க வேண்டாம் என உரிமையாளர் கூறியதால் நிறுத்தியதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.
இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என்றும், அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் விமலன் கூறினார். பேருந்து உடனடியாக அங்கிருந்து புறப்பட வேண்டும் என அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து பேருந்து இயக்கப்பட்டது. Nellai private bus stopped சம்பவம் தொடர்பான ஓட்டுநரும் போலீஸ் அதிகாரியும் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
நெல்லையில் சிறப்பு பறக்கும் படையினர் எந்தச் சோதனையும் நடத்தவில்லை என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போக்குவரத்துத் துறைக்கு அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.































