இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற மோதல் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் நியமித்துள்ள விசாரணைக் குழு கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் 10 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்திருந்த நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் திறக்கப்படும் போகம்பறை சிறைச்சாலை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளை இந்த வாரத்திற்குள் பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக போகம்பறை சிறைச்சாலையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
































