வீட்டுச் சோதனையில் கணினிகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில் பழனி அடிவாரம் காவல்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.
வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ், நிலம் வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும் இடைத்தரகருமான ஜெயபிரகாஷ், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
அவரை விசாரிக்க முதலில் ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், 24ஆம் தேதி மதியம் 1 மணி வரை மூன்று நாள் காவலுக்கு அனுமதித்தது. விசாரணையின்போது ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, 2 CPU-க்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. Palani land fraud case-ல் கைப்பற்றப்பட்ட இவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஜெயபிரகாஷ் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
































