RATP வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி தற்போது Line 14 ல் திட்டமிடப்பட்ட புதிய சேவை நிறுத்தம் எதுவும் இல்லை. இருப்பினும் ஆண்டின் பல்வேறு காலங்களில் பராமரிப்பு பணிகளுக்காக இரவு நேரங்களிலும் சில குறிப்பிட்ட நாட்களிலும் சேவை மாற்றங்கள் அறிவிக்கப்படக்கூடும் என்பதால் பயணத்திற்கு முன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் தானியங்கி இயக்க முறை சிக்னல் அமைப்புகள் தண்டவாளங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் Line 14 சேவையின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மேலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

































