தேர்தல் நியாயத்தை உறுதி செய்யவே போராட்டம் என விளக்கம்
அப்போது பேசிய பிரசாந்த் பூஷண், அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்துவதும், அரசின் தவறுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்வதும் ஜனநாயக நாட்டில் குற்றமல்ல என்றார். தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதே தற்போதைய போராட்டங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், அடக்குமுறைகளும் கொடூரங்களும் தொடர்ந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், தாங்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவதாகவும் பிரசாந்த் பூஷண் கூறினார். இதற்கு முன்பு பாஜகவும் ஆட்சி மாற்றத்துக்காக பல போராட்டங்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டம் தற்போது ஆட்சி மாற்றத்துக்கான போராட்டமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் கண்டனம்
பிரசாந்த் பூஷணின் Prashant Bhushan regime change statement கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், போராட்டக் குழுக்கள் இளைஞர்களைப் பயன்படுத்தி வன்முறை அரசியலில் ஈடுபட வைப்பதாக குற்றம்சாட்டினார்.
பங்களாதேஷில் நடந்ததைப் போல இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். அரசைக் கவிழ்ப்பதே அவர்களின் ஒரே நோக்கம் என்றும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் செயல்களில் இளைஞர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.































