குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். சுமார் 2010ஆம் ஆண்டில், ஒரு துணை ஒப்பந்த நிறுவனம் தொழிற்சங்க அதிகாரிகள், அமைப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகளுக்கு பணம் வழங்கி, வரவிருக்கும் பணிகள் குறித்த தகவல்களையும் ஒப்பந்த வாய்ப்புகளையும் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் பரவலான முறைகேடுகள் என வாதம்
கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சர்ஃபர்ஸ் பாரடைஸ் ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆடம்பர விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாகவும் சாட்சி கூறினார். அந்த விருந்து, துணை ஒப்பந்த நிறுவனத்துக்கு வேலைகளைப் பெற்றுத் தந்தவர்களுக்கான பரிசாக இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
குயின்ஸ்லாந்து லைட் ரெயில் திட்டத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் சில நடனக் கலைஞர்கள், தொழில் வட்டாரத்தினருடன் பழகிய பின்னர் இரவு நேர போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணிகளில் அமர்த்தப்பட்டதாகவும் சாட்சியம் பதிவானது. பணியிடத்தில் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், விக்டோரியாவைச் சேர்ந்த நான்கு மூத்த தொழிற்சங்க அதிகாரிகளுக்கு பணம், விளையாட்டு நிகழ்ச்சி டிக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு கணக்குகள் மூலம் பலன்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். Queensland CFMEU inquiry-யில் சாட்சியமளித்தவர், கட்டுமானத் துறையில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக உள்ளதாகக் கூறினார். குற்றச்சாட்டுகள் தொடர்புடையவர்களின் அடையாளங்கள் ஒடுக்கல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.































