தாயின் நகைகளை கேட்டு மகள் தகராறு
தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயது கீதாவின் கணவர் ரவி, சென்னையில் லாரி ஓட்டி வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுகன்யா என இரு மகள்கள் உள்ளனர். கணவரைப் பிரிந்த சரண்யா, தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்ததுடன், தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரண்யாவின் குழந்தைகள், வீட்டுக்குள் கீதா ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்தனர். தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த கீதாவுக்குச் சொந்தமான 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10,000 காணாமல் போனது தெரியவந்தது.
முதலில் கொள்ளையர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீஸார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தனர். பின்னர் விசாரணையில் சரண்யாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், தாயிடம் இருந்த 30 பவுன் நகைகளில் சிலவற்றைத் தனது தேவைக்காக அடகு வைக்கக் கேட்டதாகவும், அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாகவும் சரண்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் கீதாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தாயின் மரணம் குறித்து அறிந்தும் எதுவும் தெரியாததுபோல் வந்து அழுததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. Ranipet mother murder வழக்கில் ஆண் நண்பருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
































