2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும், 2032ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார். 2036ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் போட்டியே தனது கடைசி ஒலிம்பிக் தொடராக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
2028 போட்டியில் ஒலிம்பிக் சாதனை இலக்கு
தற்போது தனது முக்கிய கவனம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதிய ஒலிம்பிக் சாதனை படைப்பதில் இருப்பதாக ருமேஷ் தரங்க கூறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையைப் பதிவு செய்த அர்ஷத் நதீமின் சாதனையை முறியடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியில் 90 மீட்டருக்கு மேல் சராசரி தூரத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். Rumesh Tharanga retirement 2036 Olympics முடிவுடன், அடுத்தடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளுக்கான தனது திட்டத்தையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.






























