குளிர்போர் முடிவுக்குப் பிறகு மிகக் கடுமையான நிலை
ரஷ்யா தொடர்பான புதிய அச்சுறுத்தல் மதிப்பீட்டை அந்நாட்டின் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதையொட்டி டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் யெப்பே புரூஸ், பாதுகாப்பு உளவுத்துறைத் தலைவர் தோமஸ் ஆரென்கீல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் மைக்கேல் ஹில்கார்ட் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
தற்போதைய நிலை, குளிர்போர் முடிவடைந்த காலத்துக்குப் பிறகு இதுவரை காணப்படாத அளவுக்கு மிகவும் தீவிரமாக இருப்பதாக அமைச்சர் யெப்பே புரூஸ் தெரிவித்தார். நேட்டோ மற்றும் மேற்கு நாடுகளை இலக்காகக் கொண்ட ரஷ்யாவின் கலப்புப் போர் நடவடிக்கைகள் வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்பதே புதிய மதிப்பீட்டின் முக்கிய எச்சரிக்கையாகும்.
Russia hybrid war threat குறித்த இந்த மதிப்பீடு, டென்மார்க் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் பாதுகாப்பு நிலை தொடர்பான கவலையை வெளிப்படுத்துகிறது. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களில், நடவடிக்கைகள் எந்த வடிவத்தில் இருக்கும் என்பது குறித்து கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
































