Saudi Arabia அரசு, ஹஜ் பயணிகளின் சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் தனது தேசிய “சூப்பர் ஆப்” ஆன Tawakkalna செயலியின் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக “Makkah Route Initiative” திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் ஹஜ் யாத்திரிகர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்தே ஹஜ் அனுமதி மற்றும் பயண ஆவணங்களை மின்னணு வடிவில் பார்க்கவும் பயன்படுத்தவும் இப்போது வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் Saudi Data and Artificial Intelligence Authority (SDAIA) உருவாக்கிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் குடிவரவு சுங்க மற்றும் சுகாதாரச் செயல்முறைகள் முன்கூட்டியே நிறைவேற்றப்படுவதால் ஹஜ் பயணிகளின் பயணம் மிகவும் வேகமாகவும் சிரமமின்றியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது Tawakkalna செயலியில் 1,300-க்கும் மேற்பட்ட சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் 35 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது சவுதியின் “Vision 2030” டிஜிட்டல் மாற்றுத் திட்டத்தின் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading