Tag: வெளிநாட்டு கல்வி
France Indian Students பிரான்சில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்களை அதிகளவில் ஈர்க்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்சுக்கு வரவேற்பதே இலக்கு என பிரான்ஸ் நிர்ணயித்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் சுமார் 9,100 இந்திய மாணவர்கள் பிரான்சில் கல்வி பயின்றதாக Campus France தரவுகளை மேற்கோளிட்டு India Today தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. குறைந்த கல்விக் கட்டணம் முக்கிய ஈர்ப்பு அமெரிக்கா, பிரிட்டன், […]
மாணவர் அனுமதி, 2026 ஆம் ஆண்டிற்கான கனடா கல்வி அனுமதிப்பத்திரம் பெற விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான முக்கிய விண்ணப்ப நடைமுறைகளை கனடா வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வெற்றிகரமாக அமைய மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஆறு முக்கிய படிகள் குறித்து அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் கனடாவின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமான (Designated Learning Institution – DLI) ஒன்றிலிருந்து அதிகாரப்பூர்வ சேர்க்கைக் கடிதம் பெற வேண்டும். சேர்க்கை வழங்கும் கல்வி நிறுவனம் DLI பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். […]
பின்லாந்து குடியிருப்பு அனுமதி, விண்ணப்ப செயல்முறையில் தாமதம் பின்லாந்து குடிவரவு சேவை அமைப்பான Migri Finland வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் பின்லாந்து குடியிருப்பு அனுமதி (Residence Permit) விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களில் பலவும் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களைக் கடந்தும் நிலுவையில் உள்ளதாக Migri தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அடையாள […]
இலங்கை உயர்கல்வி மாணவர்களுக்கு அதிஷ்டம் – 20 மில்லியன் வரை அரச உதவி இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்காக வெளிநாடுகளில் இளமாணிப் பட்டப்படிப்பை தொடர 200 அரச புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசின் கொள்கைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த அரச உதவி திட்டம் 2025 முதல் 2029 வரை ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் […]