எரிபொருள் விலை உயர்வு 50% தனியார் பேருந்துகள் மட்டுமே சேவையில்
எரிபொருள் விலையேற்றத்துக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவோ அல்லது டீசலுக்கான மானியத்தை வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத நிலையில் தனியார் பேருந்து சேவைகளை தொடர்ந்து நட்டத்தில் முன்னெடுக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்த வாரம் முதல் தனியார் பேருந்து சேவைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் சுமார் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என கூறினார். […]
