ஒரு மாத காலத்திற்கு எரிபொருள் மானியம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சோ சாதகமான பதிலை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வருடாந்த கட்டணத் திருத்தம் ஜூலை மாத முதல் வாரத்தில் அமல்படுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், செலவுகள் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே சுமார் 25 சதவீத தனியார் பேருந்துகள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவைகளிலிருந்து விலகியுள்ள நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பாடசாலை மற்றும் அலுவலக நெரிசல் நேரங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதுடன் வழமையாக நான்கு தடவைகள் இயக்கப்படும் சேவைகள் மூன்று தடவைகளாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தினார்.



























