கதிர்காம ஆலய ஆடிவேல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் திருத்தலமான கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா புதன்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்ற நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. வழமையான மரபுப்படி கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்துகதிர்காம ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளின் மத்தியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இன மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் […]
