வறுமைக்கோடு உயர்வு
இலங்கையில் தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏப்ரல் மாதத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தது 17,117 ரூபா மாதாந்த வருமானம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறுமைக்கோடு ஜனவரியில் 16,730 ரூபாவாக இருந்த நிலையில் ஏப்ரலில் 17,117 ரூபாவாக உயர்ந்துள்ளது. மாவட்ட ரீதியாக கொழும்பில் 18,461 ரூபாவுடன் அதிகபட்ச வறுமைக்கோடு பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மற்றும் நுவரெலியா அடுத்த […]
