சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையில் தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏப்ரல் மாதத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தது 17,117 ரூபா மாதாந்த வருமானம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறுமைக்கோடு ஜனவரியில் 16,730 ரூபாவாக இருந்த நிலையில் ஏப்ரலில் 17,117 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மாவட்ட ரீதியாக கொழும்பில் 18,461 ரூபாவுடன் அதிகபட்ச வறுமைக்கோடு பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மற்றும் நுவரெலியா அடுத்த இடங்களில் உள்ளன. மறுபுறம் மொனராகலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குறைந்த வறுமைக்கோடு பதிவாகியுள்ளது. 2012–2013 காலப்பகுதியில் 5,223 ரூபாவாக இருந்த இந்த அளவுகோல் தற்போது மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளதால் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ குறைந்தது 70,000 ரூபா மாத வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சி ஏற்பட்டாலும் அதன் பயன் ஏழை மற்றும் நலிவுற்ற மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை என மத்திய வங்கியும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பன்முக வறுமை நாட்டில் இன்னும் தீவிர சவாலாக நீடித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading