லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,465 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,792 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதன் புதிய விலை 835 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.









Leave a Reply