ITJP புதிய தரவுத்தளம் 1980களின் இறுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் பெயர் விபரங்கள் வெளியீடு
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (Indian Peace Keeping Force) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில் கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது. 1987 ஒக்டோபர் முதல் 1990 மார்ச் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மனித […]
