Tag: Three Wheeler Accident
காலி–கொழும்பு பிரதான வீதியின் கட்டுக்குருந்த பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர். பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த விபத்து புதன்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளையில் நடைபெற்ற பொசன் போயா தின வழிபாடுகளை முடித்துவிட்டு நான்கு பேர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த பாட்டியும் பேரனும் […]
மட்டக்களப்பு முச்சக்கரவண்டி விபத்து மாவட்டத்தின் பெரியகல்லாறு பிரதான வீதியில் இன்று முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. நிந்தவூரில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மட்டக்களப்பு முச்சக்கரவண்டி விபத்து முச்சக்கரவண்டி சாரதி உட்பட மொத்தம் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.