சென்னை குதிரை உயிரிழப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடிய ‘கிளாண்டர்ஸ்’ தொற்று குறித்து எச்சரிக்கை
சென்னை சேப்பாக்கத்தில் சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று ‘கிளாண்டர்ஸ்’ எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றன. கால்நடைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ‘பர்கோல்டேரியா மல்லேய்’ என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் குதிரை, கழுதை போன்ற விலங்குகளை பாதிப்பதுடன் அரிதாக மனிதர்களுக்கும் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். […]
