‘பர்கோல்டேரியா மல்லேய்’ என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் குதிரை, கழுதை போன்ற விலங்குகளை பாதிப்பதுடன் அரிதாக மனிதர்களுக்கும் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூச்சுக்காற்று உடல் திரவங்கள் அல்லது காயங்கள் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, நுரையீரல் தொற்று, கை கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். தற்போது இந்த நோய்க்கு முழுமையான தடுப்பூசி அல்லது உறுதியான சிகிச்சை இல்லாததால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தனிமைப்படுத்துதல் மற்றும் அவசியமான சூழலில் கருணைக் கொலை செய்வதும் நடைமுறையில் உள்ளது. குதிரைகளை பராமரிப்பவர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிவதுடன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
































