வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உடல் மீட்பு
தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்த முஹம்மது பாரூக் (32), ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். அவரது சகோதரர் அசார் (28), மீன் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
பாரூக்கின் தாய் நிஷா வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தார். அவரது அழுகைச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத், தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரும் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணன், தம்பி இருவருக்கும் போதைப் பழக்கம் இருந்ததாகவும், அசார் கஞ்சா மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் அடிக்கடி மதுபோதையில் சண்டையிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த கத்தியால் பாரூக்கின் கழுத்தை அறுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Trichy auto mechanic murder தொடர்பாக அசாரைப் பிடித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


































