மேலும் இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கத் தாக்குதல்கள் இராணுவத் தளத்தின் படைவீரர் தங்குமிடங்கள் காவலர் சாவடிகள், தங்கும் வசதிகள் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஏழு மணி நேரம் நீடித்த புதிய கட்டத் தாக்குதலின் போது ஈரானின் பல இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச நிலைத்தன்மை குறித்து புதிய அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.































