நடிகர் டாம் கான்டி, திரைப்படத்தில் டில்லியுடன் நடிக்கும் மற்றவர்கள் உண்மையான நடிகர்களா அல்லது டிஜிட்டல் உருவங்களா என்று கேட்டார். அதற்கு டில்லி, இது உண்மையான இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் படத்தொகுப்பாளர்கள் பங்கேற்கும் ‘கலப்பு தயாரிப்பு’ என்று விளக்கினார்.
காந்தோனீஸ் மொழியில் தொடர்ந்த பதில்
கேள்விக்கு தெளிவான பதில் கேட்டு டாம் கான்டி மீண்டும் வினவியபோது, ‘Misaligned’ படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் தன்னைப் போல டிஜிட்டல் இரட்டையர்கள் என்று டில்லி கூறினார். பின்னர் தனது முந்தைய விளக்கத்தைத் தொடர முயன்றபோது, திடீரென காந்தோனீஸ் மொழியில் பேசத் தொடங்கினார். இதனால் டாம் கான்டியும் தொகுப்பாளர் பியர்ஸ் மோர்கனும் ஆச்சரியத்துடன் சிரித்தனர்.
நிகழ்ச்சியில் நடந்தது குறித்து கேட்டபோது, சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக டில்லி தெரிவித்தார். சீன மொழியில் பேசும் நோக்கம் தனக்கில்லை என்றும், சில நேரங்களில் இதுபோன்ற தடுமாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறினார். இந்த Tilly Norwood interview glitch தொடர்பாக, Particle 6 ஸ்டுடியோ பிரதிநிதிகள், அவர் தொழில்நுட்பப் பிரச்சினையை சந்திக்கவில்லை என்றும், காந்தோனீஸ் சொல் ஒன்றை தவறாகக் கேட்டதால் மொழி மாறியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
Particle 6 உருவாக்கிய ‘Misaligned’ படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. உடல், குழந்தைப் பருவம் அல்லது தனிப்பட்ட அனுபவம் இல்லாத Tilly என்ற AI கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இப்படம், டில்லி நோர்வுட்டின் முதல் முக்கிய நடிப்பாகும்.































